தொலைபேசி - சாமர்த்தியபேசி
கனிமத்தினுள் ஊடுருவினாள்
சரடின் அந்தம் முதல்
இறுதி வரை சென்றடைந்தாள்
தொலைவரியில் இருந்து மாறுபட்டாள்
துருவங்களின் இடைவெளி ஒடுக்கினாள்
மக்களை உரையாடவிட்டு மகிழ்ந்தாள்
தொலைபேசியாகப் பிறந்தாள்!
தொடுப்பில்லாமல் சிறு தூரம்
அலைய கற்றுக் கொண்டாள்
நாளடைவில் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்தாள்
விரைவில் குறுந்தகவல் மூலம் பேசினாள்
தொடுப்பில்லாப்பேசியாக வளர்ந்தாள்!
மெல்ல பாடுவதில் தேறினாள்
கண்ணில் பட்டதை மனதில் சேமித்தாள்
இணையதளம், நீலப்பல் கொண்டு
நண்பர்களுடன் பரிமாற துவங்கினாள்
தற்பொழுது,
இயல் இசை நாடகத்தை
அடக்கி ஆளும் சாமர்த்தியசாலியாக உருமாறினாள்!