பாதம் பதிந்த பாதை இது!
பாதம் பதிந்த பாதை இது!
உங்கள்
பாதம் பதிந்த பாதை இது!
முன்னிளமைப் பருவத்தில்
உம் உச்சி முகர்ந்து
உள் வாங்கி
நட்புக்களம் தந்து
பொறியியல் சிறப்பூட்டி
சமூக ஜன்னல் திறந்து
வெளிச்சத்தின்
தளம் தந்த
வளாகம் இது…
இங்கிருப்பவை வெறும்
வகுப்பறைகள் அல்ல
அறிவைச் சுமக்கும்
கருவறைகள்…
ஆசான்கள்
ஆன்மாவோடு
அளவளாவும் ஆற்றலர்…
வெறும்
பட்டதாரியாய்
பயணிக்காமல்,
துறைசார் வல்லுனராய்,
சார்ந்த துறையின்
உச்சம் தொட்டவராய் – நீங்கள்
அறியப்படுவதால்தான்
பூசாகோ எனும்
திறன் குறியீடு
உலக வரைபடத்தில்
நிறைந்து கிடக்கிறது…
பூசாகோ எனில்
பூளைமேடு சா கோவிந்தசாமி நாயுடு அறக்கட்டளை என்பர்
மற்றுமொறு விரிவாக்கம்
பூமியில் சாதிக்கவந்த கோமகர்…
பூசாகோ உங்களிடம்
கேட்பதெல்லாம்
தொடர்பில் இருங்கள்
தொடர்ந்து வாருங்கள்
நினைவுகளை அசைபோடுங்கள்
செதுக்கிய கண்டிப்புகளை
இளையோரிடம்
பகிர்ந்திடுங்கள்
உயரிய சமூகம் படைக்க..
-இராம. ஆறுமுகநாதன்