தோழியானவள்!
அளவில்லா அன்பும்
அசையா நம்பிக்கையும்
எதிர்பார்ப்பற்ற அக்கறையும்
காண்பித்தாளே அவள்
முயற்சிக்குப் பலம் சேர்த்தாள்
வெற்றிக்கு விதையானாள்
தோல்விக்குப் பதில் அளித்தாள்
கண்ணீருக்குத் தடை போட்டாள்
மனதிற்கும் ஏற்றவளானாள்
இன்பத்தின் வேராக
துன்பத்தின் எதிரியாக
எண்ணங்களின் ஊன்றுகோலாக
விழிகளின் ஒளியாகத் திகழ்ந்தாள் அவள்
என்னை நுட்பமாக அறிந்தவள்
கோபித்தாலும் புரிந்துகொண்டாள்
என் சிரிப்பினால் மகிழ்ந்தவள்
குழப்பங்கள் தொலைந்து செல்ல பாதை உரைத்தவள்
அவளே…
என் உயிர்த் தோழி.